படம்: எக்ஸ் / துருவ் ராதி
இந்தியா

வைரலாகும் வட மாநில யூடியூபர்! தேர்தலில் பாஜக அரசுக்கு பாதகம் விளைவித்தாரா?

பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய யூடியூபர் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார்.

DIN

மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையிலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியுள்ளது.

தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் இணைந்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சமூக வலைதளங்களில் வட மாநில யூடியூபர் பிரபலமாகி வருகிறார். இவரால்தான் வட மாநிலங்களில் மோடி அரசுக்கு எதிராக மக்கள் திசை திரும்பியதாக சமூக வலைதளங்களிலும் சில ஆங்கில இதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

476 மில்லியன் யூடியூப் பார்வையாளர்களைக் கொண்ட இந்தியாவில் இதன் தாக்கம் நிச்சயம் இருக்குமென ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த யூடியூபர்?

ஹரியாணாவில் பிறந்த துருவ் ராதி ஜெர்மனியில் கேஐடியில் எஞ்னியரிங் முடித்தவர். தன்னுடைய பெயரில் யூடியூப்பினை நடத்தி வருகிறார். யூடியூப்பில் மட்டும் 21.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளார். 4.1 பில்லியன் (41 கோடி ) பார்வைகளை கடந்துள்ளன இவரது விடியோக்கள்.

தேர்தல் நேரத்தில் மோடி அரசு குறித்து இவர் வெளியிட்ட விடியோக்கள் பல மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன்மூலமாகவும் வட மாநிலங்களில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் இவரை நாயகனாக சித்தரித்து மீம்ஸ்கள் வந்துகொண்டுள்ளன.

நேற்று வாக்கு எண்ணிக்கையின்போது தனது எக்ஸ் பக்கத்தில் துருவ் ராதி, “சாதாரண மனிதர்களின் அதிகாரத்தை தவறாக கணித்துவிடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

போலியான செய்திகள், அரசியல் குறித்து தன்னுடைய எக்ஸ், யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் துருவ் ராதி.

வட மாநிலங்களில் மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்திலும் இவர் குறித்து மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த ஒரு யூடியூப் விடியோ மட்டும் 28 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT