இந்தியா

கூட்டம் நிறைவு: நிதீஷ் - சந்திரபாபு நாயுடு ஆதரவு!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் முடிந்தது.

DIN

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்தது.

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தில்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் இன்று (ஜூன்5) நடைபெற்றது.

மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மோடி இல்லத்திலிருந்து சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.

இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவரை நேரில் சென்று சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது கூட்டணி கட்சிகள் வழங்கிய ஆதரவு கடிதங்களை முன்வைத்து ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரிடம் உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் ஆகியோரும் குடியரசுத் தலைவரை சந்திக்க உடன் செல்வதாகத் தெரிகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தங்கள் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கவுள்ளனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 17வது மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

இதனை ஏற்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, 17வது மக்களவையைக் கலைக்க ஒப்புதல் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT