'நான் பாதுகாப்பாக இருக்கிறேன்' - விடியோ வெளியிட்ட கங்கனா ரணாவத்!
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த எம்பி கங்கனா ரணாவத்தை, சிஐஎஸ்எஃப் அதிகாரி கன்னத்தில் அறைந்தார்.
பாலிவுட் நடிகையும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத், தில்லி செல்வதற்காக சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, வந்தபோது விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி குல்விந்தர் கௌர் அவரை கன்னத்தில் அறைந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில்,” ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. நான் பாதுகாப்பாக இருக்கிறேன்,எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறேன். சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் செக்யூரிட்டி ஒருவர் என் முகத்தில் அறந்தார். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன். ஆனால், பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து கவலை கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக, விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களால் குல்விந்தர் கௌர் அதிருப்தி அடைந்திருந்ததால், அவர் கங்கனா ரணாவத்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.