கோப்புப் படம் 
இந்தியா

ஆண்களை விட பெண்களின் வாக்களிப்பு விகிதம் அதிகம்

மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்டத்தில் ஆண்களை விட பெண்களின் வாக்களிப்பு விகிதம் அதிகம்

DIN

ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்டத்தில் பெண்கள் வாக்களிப்பு ஆண்களை விட அதிகமாக இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் தரவுகளின்படி, பெண் வாக்காளர்கள் 64.72 பேர் சதவிகிதமும், ஆண்கள் 63.11 சதவிகிதமும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 22.33 பேர் சதவிகிதமும் வாக்களித்துள்ளனர்.

ஐந்தாவது கட்டத்தில் பெண்கள் 63 சதவிகிதமும், ஆண்கள் 61.48 சதவிகிதமும் வாக்களித்துள்ளனர். ஆறாவது கட்டத்தில், 61.95 சதவிகிதமும், ஆண்கள், 64.95 சதவிகிதமும் பெண்கள் வாக்களித்துள்ளனர்.

ஏழாவது கட்டத்தில், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அதிக பெண் வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 72.64 சதவிகிதமாகவும், ஆண்கள் 69.19 சதவிகிதமாகவும் உள்ளனர். ஜார்க்கண்டில் ஆண்கள் 68.10 சதவிகிதமாகவும், பெண்களுக்கு 73.75 சதவிகிதமாகவும் உள்ளனர். ஒடிஷாவில் ஆண்கள் 72.42 சதவிகிதமாகவும் பெண்கள் 76.50 சதவிகிதமாகவும் உள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் 58.56 சதவிகிதமாகவும், ஆண்கள் 53.47 சதவிகிதமாகவும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT