பிபவ் குமார் 
இந்தியா

கேஜரிவால் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

DIN

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் பிபவ் குமாரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், மே 13 அன்று முதல்வரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மாலிவாலைத் தாக்கியதாக புகாா் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆம்ஆத்மிக்க்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தன.

இதைத் தொடா்ந்து, அவரை கடந்த மே 18ஆம் தேதி தில்லி போலீஸாா் கைது செய்தனா். தற்போது அவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனிடையே இந்த வழக்கில் ஜாமீன் கோரி பிபவ் குமார் தரப்பில் தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை 2வது முறையாக நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னதாக கடந்த 27ஆம் தேதி இதே வழக்கில் பிபவ் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT