தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரியின் நிகர சொத்துமதிப்பு ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகளின் ஏற்றத்தினால், வெறும் ஐந்து நாட்களில் ரூ.579 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆந்திரத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, வருகிற ஜூன் 12ஆம் தேதியில் ஆந்திரத்தின் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரியின் நிகர சொத்துமதிப்பு வெறும் ஐந்து நாட்களில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பங்குச் சந்தை சரிந்தாலும், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு உயர்ந்திருந்தது. நாரா புவனேஸ்வரி, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய விளம்பரதாரர் மற்றும் 2,26,11,525 ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகளை, அதாவது நிறுவனத்தின் 24.37 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறார். இதன்மூலம், ‘நாரா நிறுவனத்தின் பங்கு செயல்திறனில் வலுவான செல்வாக்கைப் பெற்றுள்ளார்’ என்பது தெளிவாகிறது. மே 31-ல் தலா ₹ 402.90 ஆக முடிவடைந்த பிறகு, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு விலை கடந்த ஐந்து அமர்வுகளாக உயர்ந்துள்ளது. ஜூன் 4-ல் பங்குச் சந்தை சரிவு நாளில் கூட ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு விலை உயர்ந்தது. கடந்த ஐந்து அமர்வுகளில், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு விலை ஒரு பங்குக்கு ரூ.256.10 உயர்ந்துள்ளது.
நாரா புவனேஸ்வரியின் 2,26,11,525 ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகளின் உரிமையுடன், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு விலையின் சமீபத்திய உயர்வினால் நாராவின் நிகர மதிப்பில் குறிப்பிடத்தக்க உயர்வு பெற்றுள்ளார். அதாவது, இந்தப் பங்குகள் ஏற்றத்தின் விளைவாக அவரது நிகர சொத்துமதிப்பு ரூ.579 கோடியாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.