அமைச்சராக பொறுப்பேற்கும் எல்.முருகன் 
இந்தியா

மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார் எல். முருகன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், மோடி அமைச்சரவையில் இம்முறையும் இடம்பெற்றார்

DIN

எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மோடி அமைச்சரவையில் கடந்தமுறை மத்திய இணை அமைச்சராக இருந்த எல். முருகன், இம்முறையும் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல். முருகன், 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அமைச்சராக பொறுப்பேற்கும் எல்.முருகன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், மோடி அமைச்சரவையில் இம்முறையும் இடம்பெற்றார். கடந்த முறை நிதியமைச்சராக இருந்த அவர், இம்முறையும் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த எல். முருகனும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

அற்பமான புகக்தக்க வீடு 'உடல்'

SCROLL FOR NEXT