சத்தீஸ்கரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்பட வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார் என்கிற பகுதியில் சத்னாமி சமூகத்துக்கு சொந்தமான வழிபாட்டு தலத்தை, அரசு தரப்பினர் இடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் சூழ்ந்த சத்னாமி சமூகத்தினர் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர்.
பலோடாபஜார் பகுதியிலுள்ள அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மீது கற்களை தூக்கி வீசியும், கம்புகளாலும் தாக்குதல் நடத்தினர். மேலும், அங்கிருந்த வாகனங்களை தீயிட்டு எரித்தனர். ஆட்சியர் அலுவலக கட்டடத்துக்கும் தீ வைத்ததால், அப்பகுதி பெரும் பதற்றமாக மாறியது.
வழிபாட்டு தலத்தை சேதப்படுத்தியது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சத்னாமி சமூகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
பலோடாபஜார் ஆட்சியர் அலுவலகத்தில் சத்னாமி சமூகத்தினர் நடத்திய வன்முறை போராட்டத்தை சமாளிக்க ராய்ப்பூரில் இருந்து கூடுதல் படை அனுப்பப்பட்டுள்ளது.
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சம்பவங்களை மாநிலத்தில் எங்கும் பொறுத்துக்கொள்ள முடியாது என துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.