இந்தியா

77வது பிறந்தநாளைக் கொண்டாடும் லாலு பிரசாத்

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடும் லாலு பிரசாத்

DIN

ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது 77வது பிறந்த நாளை கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் கட்சித் தலைவர்கள், தொண்டர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடினார்.

பிகார் மாநிலம் பாட்னாவில், சர்குரல் சாலையில் அமைந்திருக்கும் லாலு பிரசாத் யாதவ் வீட்டு முன் இன்று காலை முதலே ஏராளமான ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் குவிந்துள்ளனர். அங்கு வந்த தொண்டர்களுக்கு லாலு பிரசாத் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

லாலு பிரசாத் இன்று தனது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். கட்சி சார்பிலும் கேக் கொண்டு வரப்பட்டடது.

தனது தந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை, மகள் ரோஹினி ஆச்சார்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, உங்களுக்கு மகளாகப் பிறந்ததில் பெருமை அடைகிறேன் என்றும், வாழ்க்கை, மனிதாபிமானம், காதல், விட்டுக்கொடுத்தல், கடின உழைப்பு போன்றவற்றை எனக்கு கற்பித்திருக்கிறீர்கள். உங்களுடன் இதுபோல பல பிறந்தநாள்களைக் கொண்டாட விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்

சிதம்பரம் அருகே முதலை கடித்து இளைஞா் காயம்

காட்டுமன்னாா்கோவில் அருகே விபத்தில் இருவா் பலி

விபத்தில் காயமடைந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே 30 மூட்டை நாட்டுவெடிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT