பறவைக் காய்ச்சல் (கோப்புப்படம்) 
இந்தியா

நாட்டில் முதல் பறவைக் காய்ச்சல்: உறுதி செய்தது உலக சுகாதார அமைப்பு!

மேற்கு வங்கத்தில் ஹெச்9என்2 தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு வயது குழந்தை: பறவைக் காய்ச்சல் முதல் தொற்று!

DIN

மேற்கு வங்கத்தில் நான்கு வயது குழந்தைக்கு ஹெச்9என்2 கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

2019-க்கு பிறகு உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் பறவை காய்ச்சல் தொற்றை அறிவிக்கிற இரண்டாவது முறை இது. குழந்தை குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.

பிப்ரவரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சுவாச கோளாறு, அதீத காய்ச்சல் மற்றும் வயிற்றுக் கோளாறு பிரச்னைகளும் இருந்தன. மூன்று மாதங்களுக்கு பிறகு நலம் பெற்றுள்ள குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள பண்ணைகளில் இருந்து இந்த தொற்றுக்கு குழந்தை ஆளாகியிருக்கலாம் எனச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தையுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கோ சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்களுக்கோ எந்த தொற்றும் ஏற்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஹெச்9என்2 என்பது காற்று மூலம் தொற்றக்கூடிய கிருமி. பொதுவாக பறவைகளில் காணப்படும். விலங்குகளுக்கு ஏற்படும் இந்தவகை தொற்றால் மனிதர்களும் சில சமயங்களில் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆங்காங்கே உருவாகி வரும் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT