கோப்புப் படம் 
இந்தியா

அக்கறையுடன் அரசியல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்து எக்ஸ் பதிவிட்டுள்ளார், தமிழிசை செளந்தரராஜன்

DIN

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்து, சமூக ஊடகக் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, 2024 தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது, தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை குறித்து கேட்க என்னை அழைத்தார். மற்றும் மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளையும் தொகுதிப் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ளுமாறும் என்னை அறிவுறுத்தினார். இந்தப் பதிவு, சமூக ஊடகங்களில் பரவிவரும் தேவையற்ற ஊகங்களையும் தெளிவுபடுத்துவதற்காகும் எனப் பதிவிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பிய நேரத்தில், அவரை அழைத்த அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கணிவான முறையில் பதிலளித்தார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித் ஷா, காட்டமாக பேசுவது போலவும், தமிழிசைக்கு ஏதோ அறிவுறுத்துகிறார் என்பது போல அமைந்திருந்தது அவரது பேச்சு. இரண்டு பேரும் பேசிக்கொள்வது சாதாரணமானதாக இல்லை என்பது, அவர்கள் அருகில் அமர்ந்திருப்பவர்களின் முகங்களிலிருந்தும் நன்றாகவே தெரிகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் விடியோவில் பதிவாகி, ஊடகங்கள் வாயிலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 12) பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம், சென்னை விமான நிலையத்தில் இந்த நிகழ்வு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பதில் அளிக்காமல், நன்றி தெரிவித்து வேகமாக சென்றுவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்த மழைக்காலக் கூட்டத் தொடா்: திருச்சி சிவா

ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

SCROLL FOR NEXT