இந்தியா

ஆந்திரத்தில் கோர விபத்து: 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்

ஆந்திரம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கண்டெய்னர் லாரி மற்றும் ஒரு மினி லாரியும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகினர்

DIN

அமராவதி: ஆந்திரம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கண்டெய்னர் லாரி மற்றும் ஒரு மினி லாரியும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆந்திரம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் சீதனப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் முன்னாள் சென்றுகொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற மினி லாரியை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே இறால் தீவனம் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியேலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்தபோது விபத்துக்குள்ளான லாரியில் பத்து பேர் இருந்ததாகவும் மற்றொரு வாகனத்தில் ஓட்டுநரும் உதவியாளரும் இருந்ததாக போலீஸ் அதிகாரி கூறினார்.

காயமடைந்தவர்களில் நான்கு பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மற்றொரு நபருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரி கூறினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு நேரில் வந்த அமைச்சர் கொள்ளு ரவீந்திரன் காயம் அடைந்தவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

மியான்மர் அதிபர் காலமானார்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

ஆற அமர... சாரா யஸ்மின்!

SCROLL FOR NEXT