கேரளத்தின் திருச்சூரில், கடந்த புதன்கிழமை (ஜூன் 12) நடைபெற்ற ஒரு செய்தியாளர் பேட்டியில் மத்திய இணைஅமைச்சர் சுரேஷ் கோபி இந்திராகாந்தியை ’இந்தியாவின் தாய்’ என்று கூறி புகழ்ந்துள்ளார்.
புங்குன்னத்தில் அமைந்துள்ள கருணாகரன் நினைவுச்சின்னமான முரளி மந்திரத்தினைப் பார்வையிட்ட சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் கோபி, இந்திராகாந்தியை ’இந்தியாவின் தாய்’ என்றும், மறைந்த காங்கிரஸ் முதல்வர் கே. கருணாகரன் மற்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஈ.கே. நாயனார் இருவரையும் தனது ’அரசியல் குருக்கள்’ என்றும் விவரித்தார். மேலும், கருணாகரன் நினைவிடத்திற்கு வருகை தருவதில் எந்த அரசியல் கருத்தையும் சேர்க்க வேண்டாம்; தனது குருவுக்கு மரியாதை செலுத்த வந்ததாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, கருணாகரனை கேரளாவில் ’காங்கிரஸின் தந்தை’ என்று வர்ணிப்பது, மற்ற கட்சித்தலைவர்களை அவமதிப்பதற்காக அல்ல என்றும் விளக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.