இந்தியா

பிகார்: கங்கை நதியில் படகு கவிழ்ந்து 6 பேர் மாயம்!

கங்கை நதியில் படகு கவிழ்ந்து 6 பேர் மாயமாகியுள்ளனர்.

DIN

பிகாரின் பாட்னா மாவட்டத்தில் பாஹர் எல்லைக்குள்பட்ட கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட குற்றவியல் நீதிபதி ஷுபம் குமார் கூறுகையில், “உமாநாத் கங்கை படித்துறை அருகே காலை 9.15 மணியளவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.

இதுவரை 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் பாதுகாப்பாக நீந்தி ஆற்றின் கரையை அடைந்தனர். ஆறு பேரை இன்னும் காணவில்லை” என்றார்.

தகவலின் பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, படகில் காணாமல் போனவர்களை கண்டறிய உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், பிகார் மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

SCROLL FOR NEXT