இந்தியா முழுவதும் மத்திய குடிமையியல் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செய்யறிவு தொழில்நுட்பம் (ஏஐ) அடிப்படையிலான பாத் ஏஐ (PadhAI) யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் 200-க்கு 170 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளது. 100 மதிப்பெண்கள் பெற்றால் தகுதி என்ற அடிப்படையில் தேர்வைத் தொடங்கிய பாத் ஏஐ வெறும் 7 நிமிடங்களில் தேர்வை முடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் குழுவால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியானது ஞாயிற்றுக்கிழமை, யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்குப் பிறகு, தில்லியின் லலித் ஹோட்டலில் கல்வித் துறை மற்றும் ஊடக வல்லுநர்கள் முன்னிலையில் பொது அமைப்பில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வை எழுதியது.
இந்த நிகழ்ச்சி நேரலையில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் யுபிஎஸ்சி தேர்வுகளில் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் இதுவாகும்.
வெளிநாட்டு செய்யறிவு தொழிநுட்ப நிறுவனங்களான ஓப்பன் ஏஐ, மைரோசாப்ட், கூகுள் இவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த செய்யறிவு தொழில் நுட்பமும் உயர் பயிற்சி மையங்களின் விடைக்குறிப்புகளுடன் சிறந்ததாக அமைந்துள்ளது.
இதுகுறித்து பாத் ஏஐ தலைமை செயல் அதிகாரி கார்த்திகேய மங்கலம் கூறுகையில், “ இந்த செய்யறிவு நுட்பமானது புதியதாக இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் பலகல்வி நிறுவனங்களில் விடைத் தாள்களை திருத்துவதில் பொதுவானதாகிவிடும்” என்றார்.
பாத் ஏஐ செயலி யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்.
இந்த செய்யறிவு தொழில்நுட்பமானது செய்திக் கட்டுரைகள், முந்தைய வினாத் தாள்கள், சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையிலும், விடைக்கான தெளிவான விளக்கங்கள், புத்தக விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.