இந்தியா

பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி

DIN

மும்பை: உத்தரபிரதேசத்தின் மாநிலத்தில் காசிப்பூரில் உள்ள பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால் அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

வங்கியை மூடுவதற்கும், லிக்விடேட்டரை ஒருவரை நியமிப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் வங்கி சமர்ப்பித்த தரவுகளின்படி, சுமார் 99.51 சதவிகித வைப்புத்தொகையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் டி.ஐ.சி.ஜி.சியிலிருந்து பெற உரிமை உண்டு என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்த ரிசர்வ் வங்கி தெரிவிக்கையில், கூட்டுறவு வங்கியின் தற்போதைய நிதி நிலையில், அதன் வைப்புத்தொகையாளர்களுக்கு முழுமையாக பணத்தை செலுத்த முடியாது. வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்றும், வங்கியின் வணிகத்தை மேலும் தொடர அனுமதித்தால் அது பொது நலன் பாதிக்கப்படும் என்றது.

இந்த நிலையில் பூர்வாஞ்சல் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக, வங்கி தனது வணிகத்தை நடத்துவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“House No: 0! ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்! சிரிக்காதீங்க!” ஆதாரங்களுடன் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

உடை தாங்கும் இடை... அமைரா தஸ்தூர்!

சின்ன திரை வரலாற்றில் முதல்முறை.... திரிவேணி சங்கமமாகும் 3 தொடர்கள்!

SCROLL FOR NEXT