இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் 1,400 கோடி ரூபாயை கர்நாடகத்தில் உள்ள குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், கர்நாடகத்தின் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படனகுப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.1,400 கோடி முதலீடு செய்யவுள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சரும், எம்பியுமான பாட்டீல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்தத் திட்டம் பற்றி அமைச்சர் பாட்டீலுடன் முத்தையா முரளிதரனுடன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து அமைச்சரின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன், "முத்தையா குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள்" (Muttiah Beverages and Confectioneries) என்ற பிராண்டின் கீழ் பானங்கள் மற்றும் தின்பண்டங்களை தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், முதலில் ரூ.230 கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம், தற்போது மொத்தம் ரூ.1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ.1,400 கோடியாக உயர்த்தப்படும். இந்தத் திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முத்தையா முரளிதரன் வரும் காலங்களில் தார்வாட்டில் மற்றொரு பிரிவையும் நிறுவத் திட்டமிட்டுள்ளதாக பாட்டீல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.