அரவிந்த் கேஜரிவால் கோப்புப் படம்
இந்தியா

ஜூலை 3 வரை கேஜரிவாலுக்கு நீதிமன்ற காவல்!

நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத் துறை விண்ணப்பத்துக்கு கேஜரிவால் தரப்பில் எதிர்ப்பு.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (ஜூலை 19) உத்தரவிட்டது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையினர், மார்ச் 21ஆம் தேதி அவரை கைது செய்தனர்.

திகார் சிறையில் கேஜரிவால் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

உடல்நிலையை சுட்டிக்காட்டி இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கேஜரிவால் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே கேஜரிவாலுக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், காணொளி வாயிலாக சிறையில் இருந்தவாறே நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டது.

நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத் துறை விண்ணப்பத்துக்கு கேஜரிவால் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவலை நீட்டிப்பதை நியாயப்படுத்தும் எந்த ஆதாரமும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி நியாய் பிந்து, ஜூலை 3ஆம் தேதி வரை கேஜரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT