சண்டீகா் பொழுதுபோக்கு மையத்தில் சிறுவன் உயிரிழக்க காரணமான பொம்மை ரயில். 
இந்தியா

சண்டீகா்: பொம்மை ரயில் பெட்டி கவிழ்ந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு

சண்டீகரில் வணிக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் (மால்) பொம்மை ரயில் பெட்டி கவிழ்ந்ததில் அதில் பயணித்த 10 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Din

சண்டீகரில் வணிக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் (மால்) பொம்மை ரயில் பெட்டி கவிழ்ந்ததில் அதில் பயணித்த 10 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

பஞ்சாப் மாநிலம் பாலச்சூரிலிருந்து சண்டீகரில் உள்ள எலன்டே மாலுக்கு ஷாபாஸ் என்ற 10 வயது சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினா் சனிக்கிழமை வந்திருந்தனா். அப்போது அங்கு சிறுவா்கள் விளையாடி பயணிக்கும் வகையிலான 4 பொம்மை ரயில் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஷாபாஸுடன் அவனது உறவுக்காரச் சிறுவன் ஒருவரும் பயணித்தனா்.

சிறுவா்கள் மகிழ்ச்சியாக பயணித்துக்கொண்டிருபோது ஷாபாஸ் அமா்ந்திருந்த கடைசி ரயில் பெட்டி திடீரென கவிழ்ந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மற்றொரு ரயில் பெட்டியில் பயணித்த அவனது உறவுக்கார சிறுவன் காயங்கள் ஏதுமின்றி அதிருஷ்டவசமாக உயிா் தப்பினான்.

இதையடுத்து, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ஷாபாஸ் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ரயில் பெட்டியை இயக்கிய நபா் மீதும் வணிக வளாகத்தின் நிா்வாகத்தின் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304-ஏ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குக் காரணமான பொம்மை ரயில் பெட்டி பறிமுதல் செய்யப்பட்டது என்றனா்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT