ஜெ.பி.நட்டா 
இந்தியா

பாஜக மாநிலங்களவை குழுத் தலைவராக ஜெ.பி.நட்டா நியமனம்

மாநிலங்களவை குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

Din

பாஜக தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா, அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் வடக்கு மும்பை தொகுதியிலிருந்து வெற்றி பெற்று, மக்களவை உறுப்பினராக திங்கள்கிழமை பதவியேற்ற மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்குப் பதிலாக நட்டா அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதேசமயம், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மாநிலங்களைவை எதிா்க்கட்சி தலைவராக தொடா்கிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மத்திய அமைச்சரவையில் ஜெ.பி.நட்டாவைத் தவிர, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உள்பட மேலும் 11 மாநிலங்களவை உறுப்பினா்கள் உள்ளனா்.

ஜெ.பி.நட்டா நியமனத்துக்கு காங்கிரஸ் மாநிலங்களவை கொறடா ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ பதிவில் வாழ்த்து தெரிவித்தாா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT