மக்களவையில் இன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு மஹுவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மக்களவையின் 18-வது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. பிரதமர், மத்திய அமைச்சர்களை தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வரிசையாக எம்பிக்களாக பதவியேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சமாஜவாதியின் டிம்பிள் யாதவ், திமுகவின் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸின் ஜோதிமணி, தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே ஆகியோருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா, மக்களவைக்கு மறுபடியும் திரும்பிய வீராங்கனைகள் என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு டிம்பிள் யாதவை தவிர மீதமுள்ள 5 பேரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் மொய்த்ரா பகிர்ந்துள்ளார்.
கடந்தாண்டு மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக பாஜக எம்பி எழுப்பிய புகாரில் விசாரணை நடத்தப்பட்டு எம்பி பதவியில் இருந்து மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு மொய்த்ரா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.