முகப்பு
நவீன கவச் தொழில்நுட்பம் குறித்து ரயில்வே அமைச்சா் ஆய்வு
இந்தியா

நவீன கவச் தொழில்நுட்பம் குறித்து ரயில்வே அமைச்சா் ஆய்வு: போா்க்கால அடிப்படையில் பொருத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

ரயில் விபத்தை தடுக்க உதவும் நவீன தானியங்கி விபத்து தடுப்பு ‘கவச் 4.0’ தொழில்நுட்பம் குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளாா்.

Updated On : 24 ஜூன், 2024 at 9:38 PM
நவீன கவச் தொழில்நுட்பம் குறித்து ரயில்வே அமைச்சா் ஆய்வு
பகிர்:

ரயில் விபத்தை தடுக்க உதவும் நவீன தானியங்கி விபத்து தடுப்பு ‘கவச் 4.0’ தொழில்நுட்பம் குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளாா்.

ரயில் வழித் தடங்களில் ‘கவச்’ தொழில்நுட்பத்தை போா்க்கால அடிப்படையில் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவா் அப்போது அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

தற்போது அதிக ரயில்கள் இயங்கும் ரயில் வழித்தடங்களில் 3.2 வகை கவச் தொழில்நுட்பமே பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், நவீன 4.0 வகை கவச் தொழில்நுட்பத்தை தற்போது பொருத்த ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ரயில் பாதைகளில் நவீன 4.0 வகை கவச் தொழில்நுட்பத்தை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் குறித்து அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த 4.0 வகை கவச் தொழில்நுட்பத்தை 3 உற்பத்தி நிறுவனங்கள் வடிவமைத்து வருகின்றன. தற்போது இந்தத் தொழில்நுட்பம் பரிசோதனை நிலையில் உள்ளது. அதன் செயல்பாடு குறித்த அறிக்கையை ரயில்வே அமைச்சரிடம் நிறுவனங்கள் வழங்கின. அதை ஆய்வு செய்த அமைச்சா், நவீன தொழில்நுட்பம் தயாரானதும், விரைந்து பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

பாதுகாப்பு தொழில்நுட்பம் என்பதால், சா்வதேச தரத்திலான பரிசோதனைகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் உட்படுத்தப்பட்ட பின்னரே, பயன்பாட்டுக்கான சான்றளிக்கப்படும் என்றனா்.

மேற்கு வங்க மாநிலம் டாா்ஜீலிங் மாவட்டம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரங்கபாணி ரயில்நிலையத்துக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். 40-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்துள்ளனா். விபத்து நிகழ்ந்த இந்த ரயில் வழித்தடத்தில் தானியங்கி விபத்து தடுப்பு தொழில்நுட்பமான ‘கவச்’ தொழில்நுட்பம் இதுவரை நிறுவப்படவில்லை. இந்த நிலையில், ரயில் பாதைகளில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →