இந்தியா

ஆளுங்கட்சியையும் கட்டுப்படுத்த வேண்டும்: ஓம் பிர்லாவிடம் அகிலேஷ்!

”அனைத்துக் கட்சிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்புகளையும் மரியாதையும் வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்."

DIN

எதிர்க்கட்சியை மட்டுமின்றி ஆளுங்கட்சியின் மீதும் உங்களின் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை வைத்தார்.

18-வது மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பி ஓம் பிர்லாவை வாழ்த்தி சமாஜவாதி கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“எனது நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வகிக்கும் பதவியில் புகழ்பெற்ற பல மரபுகள் இணைக்கப்பட்டுள்ளன. எந்த பாகுபாடுமின்றி, மக்களவைத் தலைவராக அனைத்துக் கட்சிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்புகளையும் மரியாதையும் வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த மகத்தான பதவிக்கு பாகுபாடற்ற தன்மையே முக்கிய பொறுப்பு. எந்த மக்கள் பிரதிநிதியின் குரலும் நசுக்கப்படாது, மீண்டும் வெளியேற்றம் போன்ற செயல் நடைபெறாது என்று எதிர்பார்க்கிறோம். எதிர்க்கட்சியினர் மீது இருக்கும் உங்களின் கட்டுப்பாடுகள் ஆளுங்கட்சியினர் மீதும் இருக்க வேண்டும்.

உங்களின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் மக்களவை இருக்க வேண்டுமே தவிர, வேறு வழிகளில் நடத்தக் கூடாது. உங்களின் அனைத்து நியாயமான முடிவுகளிலும் நாங்கள் உடன் நிற்போம். ஆளுங்கட்சியை எவ்வளவு மதிக்கிறீர்களோ அதே அளவுக்கு எதிர்க்கட்சிகளையும் மதித்து அவர்களின் தரப்பு நியாயத்தை முன்வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT