உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 
இந்தியா

ஓஎம்ஆர் தாள்கள் குறித்து தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஓஎம்ஆர் தாள்கள் குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

DIN

புது தில்லி: இளநிலை- நீட் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் தாளில் பிரச்னைகள் குறித்து புகாரளிக்கக் கால அவகாசம் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து பதிலளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, சில நீட் தேர்வர்கள் மற்றும் நீட் பயிற்சி மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து, தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தொடர்ந்து, இந்த மனுக்களையும் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.

நீட் தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் தாள்கள் கிடைக்கப்பெறவில்லை என்று மனுதாக்கல் செய்திருந்தனர். விசாரணையின்போது, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாணவர்களின் ஓஎம்ஆர் தாள்களை தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது, ஓஎம்ஆர் தாள்கள் தொடர்பாக புகார்களை எழுப்ப கால அவகாசம் ஏதேனும் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு, உரிய பதில் அளிப்பதாக வழக்குரைஞர் கூறியதை அடுத்து, தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT