உ.பி. முதல்வர் ஆதித்யநாத் 
இந்தியா

செங்கோல் குறித்து தமிழில் பதிவிட்ட உ.பி. முதல்வர்!

செங்கோல் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவிட்டுள்ளார்.

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே. சவுத்ரி, செங்கோல் குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து, அது 'முடியாட்சியின் சின்னம்' என்றும், சமாஜ்வாதி கட்சிக்கு தமிழ் கலாச்சாரத்தின் மீது மரியாதை இல்லை என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது.

அதுமட்டுமின்றி இது அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.

'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்” என தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் மோகன்லால்கஞ்ச் எம்பி, ஆர்.கே. சௌத்ரி, “மக்களவையில் இருந்து செங்கோலை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்” என்று மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்து குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

மலராட்டம்... ராஷி சிங்!

பிரதமர் மோடி ‘விஸ்வகுரு’ என்றால் ட்ரம்ப்புடன் பேசி தீர்வு காணலாமே! -முதல்வர் ஸ்டாலின்

கடவுள் துகள்... சரண்யா ஷெட்டி!

SCROLL FOR NEXT