ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று தனது சேவைக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், ஏர்டெல் நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு 11% முதல் 21% வரை இருக்கும், கட்டண உயர்வானது ஜூலை 3 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்லிமிட்டெட் வாய்ஸ் திட்டத்தில் ரூ. 179 லிருந்து ரூ. 199 ஆகவும் (28 நாள்கள்), ரூ. 455 லிருந்து ரூ. 509 ஆகவும் (84 நாள்கள்), ரூ. 1799 லிருந்து ரூ. 1999 ஆகவும் (365 நாள்கள்) உயர்த்தப்பட்டுள்ளது.
தினசரி டேட்டா திட்டங்களில் ரூ. 265 லிருந்து ரூ. 299 ஆகவும் (28 நாள்கள்), ரூ. 299 லிருந்து ரூ. 349 ஆகவும் (28 நாள்கள்), ரூ. 359 லிருந்து ரூ. 409 ஆகவும் (28 நாள்கள்), ரூ. 399 லிருந்து ரூ. 449 ஆகவும் (28 நாள்கள்),
ரூ. 479 லிருந்து ரூ. 579 ஆகவும் (56 நாள்கள்),ரூ. 549 லிருந்து ரூ. 649 ஆகவும் (56 நாள்கள்),
ரூ. 719 லிருந்து ரூ. 859 ஆகவும் (84 நாள்கள்), ரூ. 839 லிருந்து ரூ. 979 ஆகவும் (84 நாள்கள்), ரூ. 2999 லிருந்து ரூ. 3599 ஆகவும் (365 நாள்கள்) உயர்த்தப்பட்டுள்ளது.
டேட்டா ஆட் ஆன் சேவைகளில் ஒருநாளைக்கு 1 ஜிபி ரூ. 19 லிருந்து ரூ. 22 ஆகவும், 2 ஜிபி ரூ. 29 லிருந்து ரூ. 33 ஆகவும், 4 ஜிபி ரூ. 65 லிருந்து ரூ. 77 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று முடிந்தது. 10 ஜிகா ஹெர்ட்சுக்கான அலைக்கற்றை ஏலத்தில், 11,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ நிறுவனம் நேற்று கட்டணத்தை உயர்த்திய நிலையில் இன்று ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.