இந்தியா

அரசியலில் இருந்து விலகிய மத்திய முன்னாள் அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

DIN

பாஜக எம்பியும் மத்திய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள தனது மருத்துவமனையில் மீண்டும் மருத்துவர் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 30 ஆண்டுகால தனது அரசியல் பயணத்தை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அனைத்து கட்சித் தொண்டர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஹர்ஷ்வர்தன் தற்போது எம்பியாக உள்ள தில்லி சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்பவரை வேட்பாளராக பாஜக நேற்று அறிவித்தது. முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக தில்லி எம்.பி.யுமான கௌதம் கம்பீர், அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு தில்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிா்வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜகவின் முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா். மேலும் 34 மத்திய அமைச்சா்களின் பெயா்களும் முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், கேரளம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 195 தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT