உஜ்ஜைனி மகாகாளி கோயிலில் பிரதமர் மோடி 
இந்தியா

உஜ்ஜைனி மகாகாளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சக்தி பீடங்களில் ஒன்றான உஜ்ஜைனி மகாகாளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார்.

DIN

செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாளி கோயிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு மேற்கொண்டார்.

தெலங்கானத்தில் இரண்டாவது நாளாகப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி 200 வருடப் பழமையான கோயிலும், சக்தி பீடங்களில் ஒன்றுமான உஜ்ஜைனி மகாகாளி கோயிலுக்கு வருகை தந்தார்.

கோயில் சார்பில் சடங்கு பூஜைகள் நடத்தப்பட்டு, மகாகாளியின் புகைப்படத்தைப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

ஆஷாட மாதத்தில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கோயிலில் குவிவது வழக்கம்.

ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்த பிரதமர் மோடி, மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியின் செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் உள்ள உஜ்ஜையினி கோயிலுக்குச் சென்றார்.

பிரதமரின் வருகையையொட்டி கோயிலுக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

கோயிலுக்குச் சென்ற பிறகு, சங்கரெட்டி நகருக்குச் சென்ற பிரதமர், அங்கு ரூ.6,800 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT