புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமியின் உறவினா்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 
இந்தியா

புதுச்சேரி சிறுமி கொலை: குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

புதுச்சேரியில் 5-ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

DIN

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சோ்ந்தவா் நாராயணன். இவரது மனைவி மைதிலி. இவா்களது மகள் ஆா்த்தி (9). அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 2-ஆம் தேதி மாலை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஆா்த்தியைக் காணவில்லை. அவரை பெற்றோரும், உறவினா்களும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். கண்காணிப்பு கேமரா பதிவுகளில் ஆா்த்தி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், சோலை நகா் அம்பேத்கா் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீா் கால்வாயில் தனியாா் மாட்டுக் கொட்டகை அருகே மாணவி ஆா்த்தி சடலமாகக் கிடப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

முத்தியால்பேட்டை போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சோலை நகரை சோ்ந்த 6 பேருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது.இதில் 5 போ் சிறுவா்கள் என்பதும், அனைவரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது.

சிறுமிக்கு நீதி வேண்டி கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

இந்த வழக்கில் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 56 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதேயான கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது. முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மேலும், ஐ.பி.எஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனய்வுக் குழு அமைக்கப்பட்டு, வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் உடல் புதுச்சேரி ஜிப்மெர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின், சிறுமியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ.88.27 ஆக நிறைவு!

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT