படம் | ஏஎன்ஐ
இந்தியா

”சந்திரபாபு நாயுடு வெறும் பூஜ்ஜியம் மட்டுமே” -ஜெகன் மோகன் ரெட்டி சாடல்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ‘சித்தம் (தேர்தலுக்குத் தயாராகுங்கள்)’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன், அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இம்முறை இணைந்துள்ள நடிகர் பவண் கல்யாணின் ஜனசேனை கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. மறுபுறம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ‘சித்தம் (தேர்தலுக்குத் தயாராகுங்கள்)’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டம் அட்டாங்கி பகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று(மார்ச்.10) நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் கடுமையாக விமர்சித்தார்.

பொதுக்கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது, சந்திரபாபு நாயுடு வெறும் பூஜ்ஜியம் மட்டுமே... பிற கட்சிகளுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு ஒரு கூட்டணி அமைத்தால், அதன் முடிவு மிகப்பெரிய பூஜ்ஜியமாகத் தான் அமையும். 2014இல் அவர் அளித்த வாக்குறுதிகளை அவர் இன்னும் நிறைவேற்றவில்லை என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT