மாலை 5.30 மணிக்கு உரையாற்றுகிறார் மோடி!
கரோனா காலகட்டத்தில் மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று உரையாற்றுகிறார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30 மணியளவில் உரையாற்றவுள்ளார். அதன்படி இன்னும் சற்றுநேரத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
கரோனா காலகட்டத்தில் மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.