இந்தியா

மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம்: என்ன நடந்தது?

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது நெற்றியில் இரத்தம் வழிகிற படங்கள் வெளியாகியுள்ளது. காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளதை படங்கள் காட்டுகின்றன.

அவர் வீட்டில் காயமுற்றதாகவும் கல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கட்சியின் எக்ஸ் பக்கத்தில், “நமது தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரியளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் சாலை விபத்தில் காயமுற்றதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT