மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி நெற்றியில் காயமடைந்துள்ள படங்களை திரிணமூல் கட்சி வெளியிட்டது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து தமிழக முதல்வரின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்த சாலை விபத்து குறித்து அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டது. இந்த கடினமான நேரத்தில் மானசீகமாக நான் உடன் இருக்கிறேன், அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.