பாரத அன்னை வாழ்க: தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர்!
பாரத அன்னை வாழ்க என்று தெரிவித்து தமிழில் உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி.
சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
கோவையில் நேற்று நடைபெற்ற வாகனப் பேரணியில் கலந்து கொண்ட மோடி, இன்று காலை பாலக்காடு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
Advertisement
Advertisement
சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மோடியுடன் அமர்ந்துள்ளனர்.
சேலம் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாரத அன்னை வாழ்க என தமிழில் உரையைத் தொடங்கி பேசி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.