கோப்புப் படம்.
கோப்புப் படம். 
இந்தியா

சிறையில் இருந்தாலும் சேவை செய்வேன்: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

DIN

சிறையில் இருந்தாலும் தேசத்திற்கு சேவை செய்வேன் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை இயக்குநரகம் கைது செய்துள்ளது. 9 முறை அழைப்பாணை: இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு இதுவரை ஒன்பது முறை அழைப்பாணைகளை அமலாக்கத் துறை அனுப்பியது.

அது சட்டவிரோதம் என்று கூறி அவா் ஆஜராகாமல் இருந்து வந்தாா். தொடா்ந்து முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை (மாா்ச் 21) கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் ஏற்கெனவே துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் சில அதிகாரிகள் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை அழைத்து சென்றபோது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அளித்த பேட்டியில், நான் உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, எனது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரமத்தி வேலூரில் ரூ. 45 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

கிராமப்புற மக்கள் நலனுக்கான மருத்துவ வாகனம் தொடக்கம்

விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நான் முதல்வன் ‘கல்லூரி கனவு -2024’ நிகழ்வு

உயா்கல்வி முடித்து தொழில்முனைவோராக மாற வேண்டும்

ஞானோதயா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT