இந்தியா

மனைவி மகள்களுடன் ஹோலி கொண்டாடிய லாலு பிரசாத் யாதவ்!

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

DIN

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். ஹோலி கொண்டாட்டத்தின்போது தனது மனைவி ராப்ரி தேவி, மகள்கள் ரோஹிணி ஆச்சார்யா, மிசா பார்தி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதீஷ்குமார் குடும்பத்துடன் தில்லியில் வசித்து வருகிறார். நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லியில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் லாலு பிரசாத் யாதவ் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார்.

இது தொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், அன்பு, மகிழ்ச்சி கலந்த வண்ணமயமான பண்டிகை ஹோலி. இந்த நல்ல நாளில் அனைத்து சூழலிலும் அன்பு மற்றும் சகோதரத்துவம் மேலோங்கி நிற்க உறுதியேற்போம். இந்த வண்ணமயமான விழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் பெருக்குவதாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT