இந்தியா

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்: ஷிவ்பால் யாதவ்

DIN

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று சமாஜவாதி தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எட்டாவாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எல்லோரும் பாஜகவால் சலிப்படைந்துள்ளனர். பணவீக்கம், வரி, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழல் உச்சத்தில் உள்ளது. பாஜக அளித்த வாக்குறுதிகள் பொய்யானவை, வெற்றுத்தனமானவை.

இந்த முறை சமாஜவாதி வேட்பாளர்களுக்கு மக்கள் வெற்றியை உறுதி செய்வார்கள்.

நாங்கள் உ.பி.யில் வெற்றி பெற்றால் பாஜக அழிந்து விடும். மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். பதாயூன் தொகுதியில் இப்போதைக்கு, நான்தான் போட்டியிடுவேன். கட்சி என்ன வழிகாட்டுதல் கொடுத்தாலும் அதை பின்பற்றுவேன் என்றார்.

சமாஜவாதி கட்சி வெளியிட்ட முதல் வேட்பாளா் பட்டியலில் பதாயூன் தொகுதியில் அக்கட்சியின் மூத்த தலைவா் தா்மேந்திர யாதவ் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஷிவ்பால் யாதவுக்கு அத்தொகுதி மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளது.

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சமாஜவாதி கட்சி தேர்தலை சந்திக்கிறது. அதன்படி உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 84,000-ஐ கடந்த தங்கம் விலை! புதிய உச்சத்தில் வெள்ளி!

மேட்டூர் அணை நிலவரம்!

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

SCROLL FOR NEXT