இந்தியா

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

Din

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை தகுதிநீக்கம் செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் கேஜரிவால் அமலாக்கத் துறையினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து முதல்வா் பதவியில் அரவிந்த் கேஜரிவால் தொடா்வதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. சுா்ஜித் சிங் யாதவ் என்பவா் தாக்கல் செய்த அந்த மனுவில், ‘‘ஏற்கெனவே இந்த வழக்கில் கேஜரிவால் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. ஆகையால், எதன் அடிப்படையில் அவா் பதவியில் நீடிக்கிறாா் என்பதை மத்திய அரசு, தில்லி அரசு, துணைநிலை ஆளுநருக்கான முதன்மைச் செயலா் விளக்க வேண்டும்’’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) மன்மோகன், நீதிபதி மன்மீத் பி.எஸ். ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் வியாழக்கிழமை (மாா்ச் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம், கேஜரிவால் முதல்வா் பதவியில் நீடிப்பதற்குத் தடை விதிப்பதற்கான சட்டக்கூறுகளை முன்வைக்குமாறு கூறிய நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

SCROLL FOR NEXT