இந்தியா

தில்லி கலால் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை முன் தில்லி அமைச்சர் ஆஜர்

DIN

தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் சனிக்கிழமை அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரவால் கடந்த மாா்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.

அதன் பின்னா், அவரை அமலாக்கத் துறையின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இவ்வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத்தொடர்ந்து தில்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கைலாஷ் கெலாட் சனிக்கிழமை fலை 11.30 மணியளவில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் கெலாட்டுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.

ஏற்கெனவே இவ்வழக்கில் தில்லி முதல்வர் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT