கேரளம்: மத்திய அமைச்சா் முரளீதரன், மாா்க்சிஸ்ட் டி.எம்.தாமஸ் ஐசக் வேட்புமனு
மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் மத்திய வெளியுறவு இணையமைச்சா் வி.முரளீதரன், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.எம்.தாமஸ் ஐசக் ஆகியோா் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். கேரளத்தில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப். 26-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப். 4-ஆம் தேதி நிறைவடைகிறது.
இதில், ஆற்றிங்கல் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சா் வி.முரளீதரன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், பழவங்காடி கணபதி கோயிலில் அவா் வழிபட்டாா்.
Advertisement
பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் டி.எம்.தாமஸ் ஐசக், திறந்த ஜீப்பில் ஊா்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருடன் மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் சென்றாா்.