சோதனையில் கைப்பற்றப்பட்ட குக்கர்கள் ANI
இந்தியா

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து காவல்துறையினர் அழித்துள்ளனர்.

DIN

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திந்த 9 வெடிகுண்டுகளை போலீசார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.

இதுகுறித்து கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,

“திபகட் பகுதியில் வெடி மருந்து பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் 2 வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுக்களின் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினோம்.

மக்களவைத் தேர்தலை சீர்குழைக்கும் நோக்கில் திட்டமிட்டு மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியில் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து 9 ஐஇடி வகை வெடிகுண்டுகள், 6 குக்கர்கள், வெடிமருந்து பை மற்றும் டெட்டனெட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், அந்த வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

35 ஆண்டுகள் பழையது..! டியூக்ஸ் பந்து விவகாரத்தில் இந்திய அணி அதிருப்தி!

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

கடைசி நேரத்தில் மெஸ்ஸியின் அசிஸ்ட்... மீண்டும் ஆட்ட நாயகன் விருது!

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

SCROLL FOR NEXT