சங்கீத் சிவன் 
இந்தியா

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

பிரலப இயக்குநர் சங்கீத் சிவன் உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 65.

DIN

பிரபல மலையாள இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான சங்கீத் சிவன் உடல்நலக் குறைவால் மும்பையில் இன்று (மே 8) காலமானார். அவருக்கு வயது 65.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரரான இவர், ஹிந்தி, மலையாளத் திரைப்படத் துறையில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார்.

மும்பையில் வசித்து வந்த சங்கீத் சிவன், நெஞ்சுவலி காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மே 8) இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை அவரின் சகோதரர் சந்தோஷ் சிவன், ஆங்கில ஊடகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நாளை மாலை 4 மணியளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவனின் மூன்று மகன்களில் மூத்தவர் சங்கீத் சிவன். 1990ஆம் ஆண்டு வ்யோஹம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து யோதா, டாடி, கந்தர்வம், இடியட்ஸ் போன்ற பல படங்களை இயக்கினார். மோகன் லால் நடித்த யோதா படம் இன்றளவும் கிளாசிக் படமாக பார்க்கப்படுகிறது.

1998ஆம் ஆண்டு ஸோர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். ஹிந்தியில் 9 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சங்கீத் சிவனின் மறைவுக்கு திரையுலக பிரலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகள்: மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசளிப்பு

சபரிமலையில் மண்டல பூஜை, மகர திருவிளக்கு: நவ.16 முதல் இரு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள்

பெரியகுளம் பகுதிகளில் இன்று மின் தடை

ராஜஸ்தான்: மின் கம்பியில் உரசி தீப்பிடித்த பேருந்து- இருவா் கருகி உயிரிழப்பு; 10 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரில் அலுவல்பூா்வ மொழியாக ஹிந்தியை உறுதி செய்ய நடவடிக்கை-சட்டப்பேரவையில் ஒமா் அரசு தகவல்

SCROLL FOR NEXT