இந்தியா

ஹஜ் புனித பயணம் தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்ட முதல் குழு!

ஜம்மு-காஷ்மிலிருந்து 7,008 பயணிகள் சௌதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.

DIN

ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஹஜ் பயணிகளின் முதல் குழு இன்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 2 விமானங்கள் சௌதி அரேபியாவுக்குப் புறப்பட்டது.

இந்தாண்டு ஜம்மு-காஷ்மிலிருந்து 7,008 பயணிகள் சௌதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

642 பயணிகள் கொண்ட முதல் குழு ஸ்ரீநகரில் இருந்து தலா இரண்டு விமானங்களில் தலா 321 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று புறப்பட்டது.

ஸ்ரீநகரின் பெமினா புறநகரில் அமைந்துள்ள ஹஜ் இல்லத்திற்கு அதிகாலை முதலே பயணிகள் வரத் தொடங்கினர்.

வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் கடமையாகக் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT