இந்தியா

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

மேற்கு வங்கத்தில் 11 மணி நிலவரப்படி 32.78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

DIN

மக்களவை 4-ஆம் கட்ட தேர்தலில் 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி 24.87 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் 32.78%, குறைந்தபட்சமாக ஜம்மு - காஷ்மீரில் 14.94% வாக்குகள் பதிவாகியுள்ளது.

பிற மாநிலங்கள், 11 மணி நிலவரம்:

ஆந்திரம் - 23.10%

பிகார் - 22.54%

ஜார்கண்ட் - 27.40%

மத்திய பிரதேசம் - 32.38%

மகாராஷ்டிரம் - 17.51%

ஒடிஸா - 23.28%

தெலங்கானா - 24.31%

உத்தர பிரதேசம் - 27.12%

18-ஆவது மக்களவைக்கு ஏழு கட்டமாக தோ்தல் (ஏப். 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, மூன்று கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT