மம்தா பானர்ஜி (கோப்பு படம்) 
இந்தியா

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மம்தா குற்றச்சாட்டு: 'சிஏஏ ஒரு கண்துடைப்பு மட்டுமே'

DIN

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து தனது தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சித்து பேசியுள்ளார்.

ஜார்கிராம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, “சிஏஏ என்பது ஒன்றுமில்லை, வெறும் கண்துடைப்பு மட்டுமே. சில சமயங்களில் இந்தியர்கள் கல்வி கற்கவோ வேலைக்காகவோ வெளிநாடுகளுக்கு சென்றால் அங்கு கிரீன் கார்டுகள் பெறுகிறார்கள். அது போலதான் சிஏஏவும். குடியுரிமைக்கான எந்த உத்தரவாதமும் அதில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஜார்கிராம் தொகுதியில் பாஜக சாபில் டாக்டர் பிராணத் துடு போட்டியிடுகிறார். அவர் குறித்து பேசிய மம்தா, “இந்த பகுதியில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. நீங்கள் தேர்தலில் போட்டியிட்டால் யார் மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது. நானாக இருந்திருந்தால் அவர் பணியிலிருந்து விலக அனுமதித்திருக்க மாட்டேன். ஆனால் அதனை நான் செய்யவில்லை. பேராசை அதிகமாக இருக்கும்போது போகட்டும், பணம் சம்பாதிக்கட்டும் என நினைத்திருப்பேன்” என பேசியுள்ளார்.

துடு அரசு மருத்துவராக ஜார்கிராம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றினார். அவரின் உள்ளூர் புகழை மனதில் கொண்டு பாஜக போட்டியிட வைத்துள்ளது. 2019 தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

திரிணமூல் காங்கிரஸின் மூன்று முறை எம்.பியும் பாராசத் தொகுதி வேட்பாளருமான டாக்டர் ககோலி கோஷ் தஷ்திதர் ஒரு மருத்துவர் என பாஜக மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டாக்டர் சாந்தனு சென் ராஜ்ய சபாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT