இந்தியா

தலித் மாணவிக்கு நேர்ந்த துயரம்: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை

மாணவியின் உடலில் 38 இடங்களில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

DIN

தலித் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதிசெய்துள்ளது உயர்நீதிமன்றம்.

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் பெரும்பாவூர் குருப்பம்பாடி பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி, தலித் சமூகப் பிரிவைச் சேர்ந்த சட்டப்படிப்பு மாணவி ஒருவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அமீருல் இஸ்லாம் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டார்.

மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் பதிவாகியிருந்ததாதத் தெரிவிக்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து குற்றவாளியை தீவிரமாகத் தேடி வந்த காவல்துறை, தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த அவரை ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்தனர். அவாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கைதான நபர் குற்றஞ்செய்திருப்பது தகுந்த சாட்சியங்களுடன் நிரூபனமாகியுள்ளதால் அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தன் மீது போலியான சாட்சியங்களை கேரள காவல்துறையினர் உருவாக்கி தன்னை குற்றவாளியாக சித்தரித்திருப்பதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மேல்முறையீட்டு மனுவை இன்று(மே 20) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீமன்றம், குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT