முகப்பு
தில்லியில் தீ விபத்து
இந்தியா

தில்லி: அலிப்பூர் சொகுசுமாளிகையில் பயங்கர தீவிபத்து

தில்லி சொகுசு வளாகத்தில் உள்ள கட்டடத்தில் பயங்கர தீ..

இந்தியா

தில்லி: அலிப்பூர் சொகுசுமாளிகையில் பயங்கர தீவிபத்து

தில்லி சொகுசு வளாகத்தில் உள்ள கட்டடத்தில் பயங்கர தீ..

Updated On : 24 மே, 2024 at 10:14 AM
தில்லியில் தீ விபத்து
பகிர்:

புது தில்லி: வடக்கு தில்லியின் அலிப்பூர் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய சொகுசு மாளிகையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் ஒட்டுமொத்த சொகுசு விடுதியும் முற்றிலும் எரிந்து நாசமாகியிருக்கிறது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கார்னிவல் சொகுசு விடுதியில் இன்று பகலில் இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது. இதற்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை.

இந்த சொகுசு விடுதி, அலிப்பூரின் நரேலா சாலைக்கு அருகே அமைந்துள்ளது. இங்கு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உண்டு.

தீ விபத்து குறித்த விடியோக்களில், சொகுசு விடுதி முழுவதும் தீ மளமளவென பற்றி எரிகிறது. இந்த அலிப்பூர் பகுதியானது பல்வேறு சொகுசு விடுதிகளைக் கொண்டிருப்பதால் புகழ்பெற்ற பகுதியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →