மக்களவை 6-ஆம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 58 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 57.7% சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது. அதில் அதிகபட்சமாக ஜார்க்கண்டில் 61.41 சதவீதமும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 52.02 சதவீதமும் பதிவாகியுள்ளது.
6-ஆம் கட்டமாக, உத்தரப் பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் இன்று தோ்தல் நடைபெற்றது.
பிகார் - 52.24%
ஹரியாணா - 55.93%
ஜம்மு-காஷ்மீர் - 51.35%
ஜார்க்கண்ட்- 61.41%
தில்லி - 53.73%
ஒடிஸா - 59.60%
உத்தரப் பிரதேசம் - 52.02%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.