இந்தியா

யுபிஐ செயலிகளுக்குப் போட்டி: ஜியோவின் திட்டம் என்ன?

ஜியோவின் நிதிசார் சேவைகள்: புதிய ஜியோபினான்ஸ் செயலி அறிமுகம்

DIN

ஜியோவின் நிதிசார் சேவைகள் நிறுவனம் வடிவமைத்த ‘ஜியோபினான்ஸ்’ என்கிற செயலியின் பீட்டா வெர்சனை வெளியிடவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.

நாள்தோறும் நடைபெறும் பண பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகளை ஜியோ இந்த செயலியின் மூலமாக பயனர்களுக்கு வழங்கவுள்ளது.

டிஜிட்டல் வங்கிச் சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகள், பில் கட்டணங்கள், இன்சூன்ஸ் ஆலோசனை மற்றும் சேமிப்புக் கணக்குகள் தொடங்குதல் ஆகிய சேவைகளை அளிக்கவுள்ள இந்த செயலி பயனர் எளிதாக அணுகும் இடைமுகத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் கடன் சேவைகள், மியூச்சுவல் ஃபண்ட் மீதான கடன், வீட்டுக் கடன்கள் ஆகியவற்றை அளிக்கும் திட்டத்தை ஜியோ கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பீட்டா வெர்சன் அறிமுகத்தில் பயனர்களின் தேவைகள் கவனிக்கப்பட்டு செயலி தரமுயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் பண பரிவர்த்தனையையும் எஸ்பிஐ உள்ளிட்ட பொது, தனியார் வங்கிகள் அனைத்தும் தங்களுக்கேயான முறையில் டிஜிட்டல் வங்கிச் சேவைகளையும் அளித்துவருகிற நிலையில் இந்த சந்தையில் ஜியோ கால் பதிப்பது முதலீட்டாளர்களாலும் பயனர்களாலும் கூர்ந்து கவனிப்படுவதாக அமைகிறது.

அதானி குழுமமும் இதே துறையில் களமிறங்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு: வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் மீது பெங்களூரில் வழக்குப் பதிவு

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம்

கூட்டுறவுத் துறை உதவியாளா் பணி: 4 மையங்களில் எழுத்துத் தோ்வு

SCROLL FOR NEXT