இந்தியா

பிரசாரம் நிறைவு: கோயிலுக்கு விரையும் தலைவர்கள்

பிரசாரம் நிறைவடைந்த நிலையில், அரசியல் தலைவர்கள் கோயிலுக்கு படையெடுத்துள்ளனர்.

DIN

மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்ற நிலையில், பாஜக தலைவர்கள் பலரும் கோயிலுக்குச் சென்று வருகிறார்கள்.

அனல்பறக்கும் கோடை வெயிலுக்கு இடையே, சுமார் 45 நாள்களுக்கும் மேலாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்வுபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான கடைசி மற்றும் ஏழாவது வாக்குப்பதிவு நாளை நடைபெறவிருக்கிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு இன்னமும் 4 நாள்களே உள்ளன. முக்கிய அரசியல் கட்சிகளின் மற்றும் வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

திருமயம் கோட்டையிலுள்ள சத்தியகிரீசுவரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரி வந்து, பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, விவேகானந்தர் பாறையில் 45 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பல்வேறு கோயில்களுக்கும் சென்றுள்ளனர்.

ஷோதஷோபசார் எனப்படும் பூஜையை அமித் ஷா மேற்கொண்டார். முதலில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மனைவியுடன் சென்ற அமித் ஷா, பிறகு தமிழகத்தின் புதுக்கோட்டையில் அமைந்துள்ள கோட்டை பைரவர் கோயிலில் வழிபாடு செய்தார். மனைவி சோனல் ஷாவுடன் வேத மந்திரங்களை உச்சரித்து, சுவாமிக்கு அபிஷேகங்களை செய்தார்.

இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு தோல்வியே ஏற்படாது என்ற நம்பிக்கை வெகுகாலமாக உள்ளது. இன்னும் ஒருசில நாள்களில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் இந்தக் கோயிலுக்கு அமித் ஷா வருகை தந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அமித் ஷா தம்பதி, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே ஜே.பி. நட்டா, ஹிமாச்சலில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டம் குல தேவி கோயிலுக்குச் சென்றுள்ளார். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அயோத்தியாவில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா உஜ்ஜைனையில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பிரயங்கா காந்தி ஷிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ததாகவும், மக்கள் நலனுக்காக பிரார்த்தித்துக் கொண்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா ஆகியோர் தெளாஸாவில் உள்ள மெஹந்திபுர் பாலாஜி கோயிலில் வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

SCROLL FOR NEXT